சச்சின் டெண்டுல்கரின் விலா எலும்பை உடைத்த அக்தர்.. 2 மாசம் இரும முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்பட்ட சச்சின்

By karthikeyan VFirst Published May 17, 2021, 7:00 PM IST
Highlights

ஷோயப் அக்தர் தனது விலா எலும்பை உடைத்ததையும், அதனால் தான் பட்ட அவதியையும் விவரித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்து, பல்வேறு பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர்.

தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் கெரியரில் வாசிம் அக்ரம், ஆம்ப்ரூஸ், அக்தர், பிரெட் லீ உள்ளிட்ட பல மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்கள் பலரை எதிர்கொண்டு சிறப்பாக ஆடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் சில பேட்ஸ்மேன் - பவுலர்க்கு இடையேயான மோதல் ரசிக்கத்தக்கதாக இருக்கும். அந்தவகையில், அப்படியான ஒரு மோதல் ஜோடி சச்சின் - அக்தர். அக்தரின் பவுலிங்கை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்வதை பார்க்க மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

சச்சின் - அக்தர் மோதலில் சில நேரங்களில் சச்சினும் சில நேரங்களில் அக்தரும் வென்றிருப்பர். ஆனால் இறுதியில் ஜெயித்தது என்னவோ கிரிக்கெட் தான். 

அன் அகாடமி நடத்திய விவாத நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், அக்தர் தனது விலா எலும்பை உடைத்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். அதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், 2007ல் பாகிஸ்தான் இந்தியாவிற்கு வந்து ஆடிய தொடரில், அக்தர் வீசிய முதல் ஓவரிலேயே, என் விலா எலும்பில் அடி விழுந்தது. அக்தரின் பந்தில் விலா எலும்பில் விழுந்த அடி பயங்கரமாக வலித்தது. 2 மாதத்திற்கு அதன் தாக்கம் இருந்தது. இரும முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன். 

ஆனாலும் அந்த தொடரில் தொடர்ந்து விளையாடினேன். நெஞ்சுப்பகுதிக்கான பாதுகாப்பு கவசத்தை எனக்கேற்றவாறு நானே வடிவமைத்துக்கொண்டேன். அந்த பாகிஸ்தான் தொடரை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆடினேன். ஆஸ்திரேலிய தொடரின் முடிவில் எனது இடுப்பில் காயம் ஏற்பட்டது. ஆஸி., தொடர் முடிந்ததும் முழு உடல் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது கூட நான் மருத்துவரிடம் இடுப்பு குறித்த அச்சத்தையே வெளிப்படுத்தினேன். ஏனெனில் அந்த சமயத்தில் ஐபிஎல் தொடங்கவிருந்தது. நான் இடுப்பு குறித்த அச்சத்தையே வெளிப்படுத்திய நிலையில், மருத்துவர் எனது விலா எலும்பு முறிந்திருக்கலாம் என்றார். அதற்கு சிகிச்சை எடுத்ததால், ஐபிஎல்லில் முதல் 7 போட்டிகளில் ஆடவில்லை. அக்தர் வீசிய பந்தில் விழுந்த அடி, 2 மாதம் என்னை கஷ்டப்படுத்தியது என்றார் சச்சின்.
 

click me!