#WIvsAUS ஆஸி., அணியின் மேட்ச் வின்னருக்கே டீம்ல இடம் இல்ல..! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published May 17, 2021, 5:54 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியில் முக்கியமான வீரரான மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்படவில்லை.
 

ஆஸ்திரேலிய அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஜூலை 9 முதல் 24 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.

அந்த தொடருக்கான 23 வீரர்களை கொண்ட முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸி., அணியில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடும் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ், ஸ்டோய்னிஸ், ஷார்ட், மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி ஆகிய வீரர்கள் அனைவரும் உள்ளனர்.

ஆனால் அந்த அணியின் முக்கியமான வீரரும் மேட்ச் வின்னருமான மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்படவில்லை. தற்போது இங்கிலாந்தில் கவுண்டி மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆடிவருவதால் அவரை வெஸ்ட் இண்டீஸுக்கு அழைத்து செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லபுஷேனை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு அழைத்து செல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் அவரை அணியில் எடுக்க முடியவில்லை என்றும், அவரால் ஆஸி.,க்காக ஆடமுடியாததை நினைத்து அவர் வருத்தப்பட்டதாகவும் ஆஸி., அணியின் தேர்வுக்குழு தலைவர் டிரெவர் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான 23 வீரர்களை கொண்ட ஆஸி., அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மெரிடித், ஜோஷ் ஃபிலிப், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், தன்வீர் சங், டார்ஷி ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
 

click me!