அஷ்வினைவிட சிறந்த ஸ்பின்னர் கிடையாது..! முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் புகழாரம்

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 8:55 PM IST
Highlights

அஷ்வினைவிட சிறந்த ஸ்பின்னர் கிடையாது என்று பாகிஸ்தான் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகிய இருவரும் திகழ்கின்றனர். அஷ்வின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும், டெஸ்ட் அணியின் நட்சத்திர ஸ்பின்னராக அஷ்வின் ஜொலிக்கிறார். அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். 

2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளிலும் 111 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் ஆடவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

ஆனாலும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய துணைக்கண்ட நாடுகளில் ஆடும்போது மட்டுமே இந்திய டெஸ்ட் அணியில் அஷ்வின் முதன்மை ஸ்பின்னராக எடுக்கப்படுகிறாரே, ஆசியாவிற்கு வெளியே, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆடும்போது, ஜடேஜா பிரைம் ஸ்பின்னராக எடுக்கப்படுகிறார். 

நேதன் லயன் உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் மிகச்சிறப்பாக வீசிவருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக், சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஸ்பின் பவுலர்கள் குறித்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், நேதன் லயன் அருமையாக வீசிக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக வீசியிருக்கிறார் நேதன் லயன். அவரது பந்துவீச்சு மற்றும் ஸ்டிரைக் ரேட் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் மிகச்சிறந்த ஸ்பின்னர்.

அடுத்தது அஷ்வின். இந்தியாவில் அவரது பந்துவீச்சு அபாரம். வெளிநாடுகளிலும் சிறப்பாகவே வீசுகிறார் அஷ்வின். ஆனால் இந்திய கண்டிஷனில் அஷ்வினை விட சிறந்த ஸ்பின்னர் யாருமே கிடையாது என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
 

click me!