கெரியர் முழுக்க இந்தியாவில் பருப்பு வேகல.. அதிகமான ரன்களை மட்டும் குவித்தாலே ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேனா..?

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 7:31 PM IST
Highlights

கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், அதற்கு தகுதியானவர் தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர்.
 

ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் ரிக்கி பாண்டிங். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தது. 2000 - 2010 காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலிய அணி தான்.

ஆஸ்திரேலிய அணியை அசைக்க முடியாத அளவிற்கு சக்திவாய்ந்த அணியாக வைத்திருந்த ரிக்கி பாண்டிங், தலைசிறந்த கேப்டன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் கூட. ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக பாண்டிங் திகழ்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளிலும் 375 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ள ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் 27,483 ரன்களை குவித்து, அதிகமான ரன்களை குவித்த மூன்றாவது வீரராக திகழ்கிறார்.

பாண்டிங், தனது கெரியரில் வாசிம் அக்ரம், குர்ட்லி ஆம்ப்ரூஸ், ஷோயப் அக்தர், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், ஷேன் பாண்ட், ஜாகீர் கான், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், ஆலன் டொனால்ட், ஷான் போலாக் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர்.

பாண்டிங் அதிகமான ரன்களை குவித்திருந்தாலும், இந்தியாவில் அவர் அவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை. அவர் ஆடிய காலத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்களாக இருந்த அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறியிருக்கிறார்.

உலகின் அனைத்து நாடுகளின் கண்டிஷன்களையும் சமாளித்து, அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்த வீரர்கள் தான் ஆல்டைம் சிறந்த வீரர்களாக திகழமுடியும். ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் எல்லாம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து நாடுகளிலும் சதங்களை விளாசியுள்ளனர். ஆனால் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கூட, பாண்டிங் இந்தியாவில் அவரது கெரியர் முழுவதுமே மோசமாகத்தான் ஆடினார். 

இந்தியாவில் அவர் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரேயொரு சதம் மட்டுமே அடித்துள்ளார். 2008ம் ஆண்டு பெங்களூரு டெஸ்ட்டில் சதமடித்தார். அது ஒன்றுதான் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த சதம். இந்தியாவில் அவர் ஆடிய 14 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 26.48 என்ற சராசரியுடன் 662 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

2008 பெங்களூரு டெஸ்ட்டில், கம்பீரை பாண்டிங் ஸ்லெட்ஜிங் செய்தபோது கூட, இந்தியாவில் நீங்கள் ஒன்றும் சாதிக்கவில்லை என்ற இந்த விஷயத்தை சுட்டிக்காட்டித்தான் கம்பீர் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!