உலக கோப்பை 2019: ஆடும் லெவனில் அவரு தேவையில்லை.. ஃபாஸ்ட் பவுலரை ஓரமா உட்கார வைக்க சொல்லும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published May 27, 2019, 1:20 PM IST
Highlights

உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் பும்ரா தான் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமையப்போகிறார். தொடக்கத்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி எதிரணிகளின் பேட்ஸ்மேன்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அவர்களை ரன் சேர்க்கவிடாமல் தடுத்து நெருக்கடியை உருவாக்கி பின்னர் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணியாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் மிகப்பெரிய பலமே பவுலிங் யூனிட் தான். முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் இந்திய அணி ஆடுகிறது. குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியும் அபாரமாக பந்துவீசிவருகிறது. 

உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் பும்ரா தான் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமையப்போகிறார். தொடக்கத்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி எதிரணிகளின் பேட்ஸ்மேன்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அவர்களை ரன் சேர்க்கவிடாமல் தடுத்து நெருக்கடியை உருவாக்கி பின்னர் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அவரது பவுலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. 

அவருக்கு ஆதரவாக ஷமியும் புவனேஷ்வர் குமாரும் உள்ளனர். ஷமி கடந்த ஓராண்டாக அபாரமாக வீசிவரும் அதேவேளையில் புவனேஷ்வர் குமார் ஓராண்டாகவே பெரியளவில் வீசவில்லை. நல்ல வேகமும் கிடைக்காமல் சிரமப்படுகிறார். ஆனால் புவனேஷ்வர் குமார் நல்ல ஸ்விங் பவுலர். எனினும் ஐபிஎல் உட்பட கடந்த ஓராண்டாகவே பெரியளவில் சோபிக்கவில்லை. 

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஃபாஸ்ட் பவுலிங் வீசுவார் என்பதால் 2ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்களுடன் தான் பெரும்பாலும் இந்திய அணி களமிறங்கும். பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதனால் பும்ராவுடன் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக யார் இறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

புவனேஷ்வர் குமார் பெரிதாக சோபிக்காத அதேவேளையில் ஷமி நன்றாக வீசுவதால் அவர் தான் ஆடும் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், ஆல்ரவுண்டராக அணியில் இருக்கும் ஹர்திக் பாண்டியா ஃபாஸ்ட் பவுலிங் நன்றாக போடுகிறார். புவனேஷ்வர் குமார் பந்தில் வேகம் இல்லை. அண்மைக்காலமாகவே அவர் ஒருநாள் போட்டிகளில் சரியாக வீசவில்லை. எனவே பும்ராவுடன் ஷமியை இறக்க வேண்டும். பும்ரா, ஷமியுடன் சேர்த்து 3வது ஃபாஸ்ட் பவுலராக ஹர்திக் பாண்டியா இருப்பார். எனவே புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்க்க தேவையில்லை என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!