உலக கோப்பை 2019: கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐநாக்ஸ் தியேட்டர் நிர்வாகம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

By karthikeyan VFirst Published May 27, 2019, 12:56 PM IST
Highlights

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் உலக கோப்பையை நேரடியாக பார்க்க முடியவில்லை என்று வருந்தும் ரசிகர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் பிரதான அணியாக இந்தியா பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் வலுவாக உள்ளது. பவுலிங் யூனிட் தான் இந்திய அணியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்த முறை லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால் ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் ஆடும். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் உலக கோப்பையை நேரடியாக பார்க்க முடியவில்லை என்று வருந்தும் ரசிகர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய அணி ஆடும் 9 போட்டியையும் நாடு முழுவதும் 12 நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் நேரலையாக ஒளிபரப்ப தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

மைதானத்தில் நேரலையாக பார்க்கும் அதே உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் உலக கோப்பையை பார்க்க இது ஒரு அரிய வாய்ப்பு. மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சூரத், புனே, புதுடெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், வதோதரா, நொய்டா, குருக்ராம், ஃபரிதாபாத் ஆகிய 12 நகரங்களில் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸில், இந்திய அணி ஆடும் 9 லீக் போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன. இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு முன்னேறினால் அந்த போட்டிகளும் ஒளிபரப்பப்படும். ஆனால் டிக்கெட் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 
 

click me!