அவரு 30+ங்க.. அவரைலாம் இஷான் கிஷன், ரிஷப் பண்ட்டோட ஒப்பிடமுடியாது..! சல்மான் பட் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 9:53 PM IST
Highlights

அனுபவம் வாய்ந்த வீரரான சூர்யகுமார் யாதவை இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்டுடன் ஒப்பிடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராக தொடங்கிவிட்டது.

உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அறிமுகமாகி அபாரமாக ஆடினர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும், சிறப்பான பவுலிங்கும் தான் காரணம். இந்த தொடரில் ஆடிய 3 போட்டிகளிலுமே இந்திய தொடக்க ஜோடி 50 ரன்களுக்கு மேல் குவித்தது. 

கடைசி டி20 போட்டியில் ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 69 ரன்களை குவித்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள்(4 முதல் 7) 45பந்துகளில் வெறும் 51 ரன்கள் மட்டுமே அடித்தனர். 

முதல் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ், 2வது போட்டியில் ஒரு ரன்னிலும், 3வது போட்டியில் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் இன்னும் அவரது ஷாட் செலக்‌ஷனில் முதிர்ச்சியடையவில்லை. மோசமான ஷாட் செலக்‌ஷனில் ஆட்டமிழந்துவிடுகிறார்.

மிடில் ஆர்டர் வீரர்கள் நிலைத்தன்மையுடன் ஆடுவதில்லை. எப்போது எந்த வீரர் சொதப்புவார் என்று தெரியாத அளவிற்கு திடீரென ஏமாற்றிவிடுகின்றனர். தவறான நேரத்தில், தேவையே இல்லாமல் தவறான ஷாட் செலக்‌ஷனால் ஆட்டமிழந்துவிடுகின்றனர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னையாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை, இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருடன் ஒப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார் சல்மான் பட்.

இதுகுறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் நிறைய உள்நாட்டு போட்டிகளில் ஆடியுள்ளார். அவரது வயது 30க்கு மேல். இந்த வயதில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக பக்குவப்பட்டிருப்பார். எனவே அதிக அனுபவம் கொண்ட சூர்யகுமார் யாதவை, அனுபவம் குறைவான இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்டுடன் ஒப்பிடக்கூடாது. அதனால் சூர்யகுமார் யாதவ் நிலைத்தன்மையுடன் ஆடவேண்டும் என்று சல்மான்பட் தெரிவித்துள்ளார்.
 

click me!