புஜாரா, ரஹானேவின் இடத்தை நிரப்பப்போவது இவங்க தான்..! யார் அந்த 3 வீரர்கள்..?

Published : Nov 22, 2021, 08:24 PM IST
புஜாரா, ரஹானேவின் இடத்தை நிரப்பப்போவது இவங்க தான்..! யார் அந்த 3 வீரர்கள்..?

சுருக்கம்

இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருபெரும் ஜாம்பவான்களின் இடத்தை நிரப்ப 3 வீரர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார் முன்னாள் தேர்வாளர் ஜதீன் பரன்ஜாப்.  

இந்திய டெஸ்ட் அணியின் தூண்களாக புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரும் திகழ்ந்துவருகின்றனர். இந்திய அணியை இக்கட்டான மற்றும் நெருக்கடியான சூழல்களிலிருந்து காக்கும் நட்சத்திர வீரர்களாக இவர்கள் திகழ்ந்துவருகின்றனர்.

புஜாரா 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இந்தியாவுக்காக 6494 ரன்களை குவித்துள்ளார். ரஹானே 78  டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4756 ரன்களை குவித்துள்ளார். இருவரும் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் ஃபார்மும் மோசமாக இருக்கிறது.

அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவருவதால் இவர்களுக்கு மாற்று வீரர்கள் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பியபோது, புஜாரா மற்றும் ரஹானேவிற்கு மாற்று வீரர்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருத்துகள் வலுத்தன.

கண்டிப்பாக அதை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது உண்மைதான். இளம் வீரர்கள் பலர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாக ஆடுமளவிற்கு தகுதியான வீரர்களாக திகழ்கின்றனர். திறமையில் சிறந்த பல இளம் வீரர்கள், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்துள்ளனர். அவர்களில் சிலர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவும் தகுதிவாய்ந்தவர்கள். எனவே அவர்களுக்கெல்லாம் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது.

அந்தவகையில், புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தேர்வாளர் ஜதீன், இப்போதோ அல்லது எப்போதோ, புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் கெரியர் முடிந்துதான் ஆகவேண்டும். அவர்களுக்கான மாற்று வீரர்களாக விஹாரி, ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வாய்ப்பை பிடித்துவிடுவார்கள் என்று ஜதீன் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி