சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அவரை ஆடவைத்தால் இந்திய அணியின் லெவலே வேற..! சல்மான் பட் கருத்து

By karthikeyan VFirst Published Oct 19, 2021, 7:55 PM IST
Highlights

இந்திய அணி சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஆடவைத்தால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவடைவதுடன், நல்ல பேலன்ஸையும் பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் வரும் 24ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை தூக்கும் முனைப்பில் இந்த உலக கோப்பை தொடரில் களமிறங்குகிறது இந்திய அணி.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக உள்ளது. ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என சிறந்த பேட்டிங் ஆர்டரை இந்திய அணி பெற்றுள்ளது. பவுலிங்கிலும் பும்ரா, ஷமி ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களுடன், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரும் உள்ளார். புவனேஷ்வர் குமார் ஃபார்மில் இல்லை என்றாலும், சீனியர் பவுலர் என்ற முறையில் அவரும் அணிக்கு வலுசேர்ப்பார்.

ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் அஷ்வின், ஜடேஜா ஆகிய அனுபவஸ்தர்களுடன், மாயாஜால ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் ஆகியோரும் உள்ளனர்.

இந்திய அணியில் பெரிதும் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்மில் இருப்பது கவலையளிக்கும் விஷயம். ஐபிஎல் 14வது சீசனில் அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் 7 போட்டிகளில் வெறும் 144 ரன்கள் மட்டுமே அடித்தார் சூர்யகுமார். அதில் 82 ரன்கள் ஒரே போட்டியில் அடித்தார். மீதம் 6 போட்டிகளில் 62 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இதையும் படிங்க -டி20 உலக கோப்பையில் அவர் தான் இந்திய அணியின் "X Factor" பிளேயர்..! கம்பீர், இர்ஃபான் பதான் ஒருமித்த கருத்து

சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் கவலையளிக்கும் நிலையில், இஷான் கிஷன் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவருவது இந்திய அணிக்கு நல்ல விஷயம். ஐபிஎல்லில் கடைசி ஒருசில போட்டிகளில் அபாரமாக ஆடிய இஷான் கிஷன், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். ஆனால் சூர்யகுமார் 9 பந்தில் 8 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சூர்யகுமாருக்கு பதிலாக இந்திய அணி இஷான் கிஷனை ஆடவைக்கலாம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்.

இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃப்ளோ இலங்கையில் இருந்தமாதிரி இப்போதில்லை. ஐபிஎல்லில் அமீரகத்தில் ஒரு இன்னிங்ஸை தவிர மற்ற எதிலும் அவர் சரியாக ஆடவில்லை. அவரது மோசமான ஃபார்ம் தொடரும்பட்சத்தில், நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் இஷான் கிஷனை சூர்யகுமாருக்கு பதிலாக இந்திய அணியில் ஆடவைக்கலாம். தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் இஷான் கிஷனைத்தான் ஆடவைக்க வேண்டும். ஆட்டத்தையே மாற்றக்கூடிய கேம் சேஞ்சர் இஷான் கிஷன்.

சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷன் ஆடினால், இந்திய அணி மிடில் ஆர்டரில் 2 இடது கை பேட்ஸ்மேன்களை(ரிஷப், இஷான்) பெறும். இடது - வலது காம்பினேஷனுக்கு அது உதவும் என்று சல்மான் பட் தெரிவித்தார்.
 

click me!