#T20WorldCup ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓமனை எதிர்கொள்ளும் வங்கதேச அணியின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

Published : Oct 19, 2021, 07:47 PM IST
#T20WorldCup ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓமனை எதிர்கொள்ளும் வங்கதேச அணியின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

வெற்றி கட்டாயத்தில் ஓமன் அணியை எதிர்கொள்ளும் வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

டி20 உலக கோப்பையில் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 17ம் தேதி முதல் நடந்துவருகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் தொடங்குகின்றன. இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

ஒரு அணி 3 தகுதிச்சுற்று போட்டிகளில் ஆடும். முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட வங்கதேச அணி தோல்வியடைந்தது. இதையடுத்து இன்று ஓமனை எதிர்கொள்ளும் வங்கதேச அணி வெற்றி கட்டாயத்தில் ஆடுகிறது. ஸ்காட்லாந்துக்கு எதிராக இலக்கை விரட்டி தோல்வியை தழுவிய வங்கதேச அணி, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடுகிறது.

ஓமன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்க்காருக்கு பதிலாக முகமது நயீம் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ், முகமது நயீம், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

ஓமன் அணி:

ஜதீந்தர் சிங், ஆகிப் இலியாஸ், காஷ்யப் ப்ரஜபதி, ஜீஷன் மக்சூத்(கேப்டன்), முகமது நதீம், அயான் கான், சந்தீப் குட், நசீம் குஷி(விக்கெட் கீப்பர்), கலீமுல்லா, ஃபயாத் பட், பிலால் கான்.
 

PREV
click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!