தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில், டிஎன்பிஎல் 2023 தொடரின் 7ஆவது சீசனின் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
இதில், முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 86 ரன்கள் சேர்த்தார். பின்னர், 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஆடியது. இதில் விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா மட்டும் 33 ரன்கள் செர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 109 ரன்கள் எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இந்தியாவின் முதல் டெஸ்ட் சீரிஸ் அறிவிப்பு!
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் தொடரின் 2ஆவது போட்டி நடக்கிறது. கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
இதுவரையில் நடந்த சீசன்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை டைட்டில் கைப்பற்றியுள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை டைட்டில் வென்றுள்ளன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
பாபா அபரஜித் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ராஜகோபால் சதீஷ், பி ஐயப்பன், உதிரசாமி சசிதேவ், சந்தோஷ் ஷிவ், எம் சிலம்பரசன், பிரதோஷ் பால், ராக்கி பாஸ்கர், எஸ் மதன் குமார், ஆர் சிபி, எம் விஜூ அருள், எஸ் ஹரிஷ் குமார், சஞ்சய் யாதவ், ராமலிங்கம் ரோகித், லோகேஷ் ராஜ், ராஹில் ஷா.
சேலம் ஸ்பார்டன்ஸ்:
கௌசிக் காந்தி (கேப்டன்), எஸ் அபிஷேக், ரவி கார்த்திகேயன், ஜெகநாத் ஸ்ரீநிவாஸ், முகமது அத்னான் கான், மான் கே ஃபாப்னா, ஆர் கவின் (விக்கெட் கீப்பர்), சன்னி சந்து, ஜெ கௌரி சங்கர், சச்சின் ரதி, என் செல்வ குமரன், பிரசாந்த் ராஜேஷ், எஸ் அரவிந்த், ஆர் எஸ் மோகித் ஹரிஹரன், விஆர்எஸ் குரு கேதர்நாத், ஆகாஷ் சும்ரா, எம் கணேஷ் மூர்த்தி, அபிஷேக் தன்வர்.தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.