#CPL2021 செயிண்ட் லூசியா கிங்ஸை பழிதீர்க்கும் வெறியில் களம் காணும் நைட் ரைடர்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Aug 31, 2021, 07:18 PM IST
#CPL2021 செயிண்ட் லூசியா கிங்ஸை பழிதீர்க்கும் வெறியில் களம் காணும் நைட் ரைடர்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி.  

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று முன் தினம் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் லூசியா கிங்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று அந்த 2 அணிகளும் மீண்டும் மோதுகின்றன.

நேற்று முன் தினம் போராடி அடைந்த தோல்விக்கு, உடனடியாக பழிதீர்க்கும் வாய்ப்பு நைட் ரைடர்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் களம் கண்டுள்ளது நைட் ரைடர்ஸ் அணி.

செயிண்ட் கிட்ஸில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்:

லெண்டல் சிம்மன்ஸ், டியான் வெப்ஸ்டர், காலின் முன்ரோ, பொல்லார்டு(கேப்டன்), டிம் சேஃபெர்ட், தினேஷ் ராம்டின்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், இசுரு உடானா, ஜெய்டன் சீல்ஸ், ரவி ராம்பால், அகீல் ஹுசைன்.

செயிண்ட் லூசியா கிங்ஸ்:

ரகீம் கார்ன்வால், ஆண்ட்ரே ஃப்ளெட்சர்(விக்கெட் கீப்பர்), ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), ரோஸ்டான் சேஸ், மார்க் தியால், டிம் டேவிட், கீமோ பால், சமித் படேல், வஹாப் ரியாஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ், அல்ஸாரி ஜோசஃப்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!