கிரிக்கெட் வாழ்க்கையை கவுரவிக்கும் வகையில் வான்கடே மைதானத்தில் சச்சினின் முழு உருவ சிலை இன்று திறப்பு!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்படுகிறது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 15,921 ரன்களும், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.

PAK vs BAN: தொடர்ந்து 6 தோல்வி: அரையிறுதி வாய்ப்பு போச்சு; முதல் அணியாக பரிதாபமாக வெளியேறிய வங்கதேசம்!

Latest Videos

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

Pakistan vs Bangladesh:வங்கதேசத்தை துரத்தி அடித்த பாகிஸ்தான் – புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

தற்போது இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது முழு உருவச் சிலையை மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவ மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வந்தது. மேலும், சச்சினின் முழு உருவச் சிலையும் செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பணிகள் முடிந்து சச்சினின் முழு உருவச் சிலையானது மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவப்பட்டது. அதுவும் சச்சின் டெண்டுல்கரின் கேலரி அருகிலேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சச்சின் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

ODI World Cup Semi Finals: 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு யார் யாருக்கு இருக்கு?

இந்த சிலை அவரது 50 ஆண்டுகால வாழ்வை சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி இந்த மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், இன்று சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த சிலையை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகரைச் சேர்ந்த சிற்பி பிரமோத் காம்ப்ளே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Pakistan vs Bangladesh: வேகத்தில் மிரட்டிய ஷாகீன் அஃப்ரிடி – வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல் அவுட்!

click me!