திடீர்னு வந்து என் காலில் விழுந்தாட்டாப்ள கோலி! எனக்கு ஒண்ணுமே புரியல; லேட்டாதான் எல்லாமே புரிஞ்சுது - சச்சின்

Published : May 17, 2021, 09:29 PM IST
திடீர்னு வந்து என் காலில் விழுந்தாட்டாப்ள கோலி! எனக்கு ஒண்ணுமே புரியல; லேட்டாதான் எல்லாமே புரிஞ்சுது - சச்சின்

சுருக்கம்

விராட் கோலி இந்திய அணிக்கு வந்த புதிதில் நடந்த சம்பவம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பிய வீரராக விராட் கோலி பார்க்கப்படுகிறார். சச்சின் டெண்டுல்கரை போலவே சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்ந்துவருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் லெஜண்ட்ஸ் வித் அன் அகாடமி என்ற நிகழ்ச்சியில், விராட் கோலி இந்திய அணிக்கு வந்த புதிதில் நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

இந்திய அணிக்கு வந்த புதிதில், புதிதாக வரும் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், முனாஃப் படேல் ஆகியோர் தன்னை டீசிங் செய்ததாக விராட் கோலி ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அதுகுறித்து இப்போது பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. கோலியின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த நான், என்ன செய்கிறாய்? இதெல்லாம் தேவையில்லை என்றேன். திரும்பி பார்த்தால் அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள் என்றார் சச்சின்.
 

PREV
click me!

Recommended Stories

திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்.. அனுஷ்கா ஷர்மாவின் கமெண்ட்ஸ் பேஜில் கதறும் ரசிகர்கள்..
T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்.. ஓப்பனாக பேசிய ஜாம்பவான்!