ஃபின்ச் எப்படி அவுட்டாவார் என்பதை முன்கூட்டியே சொன்ன சச்சின் டெண்டுல்கர்! அதனால் தான் அவர் கிரிக்கெட் கடவுள்

By karthikeyan VFirst Published Nov 12, 2021, 10:01 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ஆரோன் ஃபின்ச் (Aaron Finch) எப்படி ஆடினால் ஆட்டமிழந்துவிடுவார் என்று சச்சின் டெண்டுல்கர் சொன்னாரோ, அதை அப்படியே செய்து ஆட்டமிழந்தார் ஃபின்ச்.
 

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வான் (52 பந்தில் 67 ரன்கள்)  மற்றும் ஃபகர் ஜமான் (32 பந்தில் 55 ரன்கள்) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்கள் மற்றும் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங் (39) ஆகியவற்றால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் (49) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் (40) பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர மேத்யூ வேடின் காட்டடி பேட்டிங் (17 பந்தில் 41 ரன்கள்) ஆகியவற்றால் 19வது ஓவரிலேயே  177 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்த போட்டிக்கு முன்பாக, சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், பாகிஸ்தான் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கை "Across Line" ஆட முயன்றால், எல்பிடபிள்யூ அல்லது போல்டு ஆகிவிடுவார் என்று எச்சரித்திருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 100MB (@100masterblaster)

இந்த வீடியோ ஆரோன் ஃபின்ச்சின் கண்களுக்கு எட்டவில்லை போலும். ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் என்ன சொன்னாரோ, அதேபோலவே ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தை Across Line ஆடமுயன்று எல்பிடபிள்யூ ஆகி கோல்டன் டக்காகி வெளியேறினார் ஃபின்ச்.

அதனால் தான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் கடவுள்.. இனிமேல் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் தொடர்பாக ஆழ்ந்து ஆராய்ந்து ஏதாவது வீடியோ போட்டால், அதை பார்க்கும் கிரிக்கெட் வீரர்கள், சம்மந்தப்பட்ட நபரிடம் அதை காட்டவேண்டும்.
 

click me!