17 வயதில் துடிப்பான பேட்டிங்.. சதத்தில் சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் முதல் சத வீடியோ

By karthikeyan VFirst Published May 24, 2020, 3:41 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதத்தை பார்த்திராதவர்களுக்காக இந்த வீடியோ..
 

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனி சாம்ராஜ்ஜியம். 100 சர்வதேச சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து, பல்வேறு பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் சச்சின். ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவரான சச்சின், இந்திய அணிக்காக, சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் ஆடினார். 

சச்சின் டெண்டுல்கர் தன்னிகரில்லா பேட்ஸ்மேன். 100 சர்வதேச சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம், அதிகமான ரன்கள் என பல சாதனைகளை படைத்தவர். 16 வயதிலேயே இந்திய அணியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து கொடுத்துள்ளார். 

எதிலும், முதல் என்பதே தனி ஸ்பெஷல் தான். அந்தவகையில், சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் 100 சதங்கள் அடித்திருந்தாலும், முதல் சதம் என்பது ஸ்பெஷல் தான். 17 வயதில் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 6வது பேட்டிங் வரிசையில் இறங்கி தனது துடிப்பான மற்றும் சிறப்பான பேட்டிங்கால் சதமடித்து அசத்தினார் சச்சின். அந்த அரிய வீடியோ இதோ..
 

click me!