இதனால் தான் சச்சின் லெஜண்ட்.. அசாத்திய செயலை அசால்ட்டா செய்து யுவராஜுக்கு பதிலடி கொடுத்த சச்சின்.. வீடியோ

Published : May 16, 2020, 10:30 PM IST
இதனால் தான் சச்சின் லெஜண்ட்.. அசாத்திய செயலை அசால்ட்டா செய்து யுவராஜுக்கு பதிலடி கொடுத்த சச்சின்.. வீடியோ

சுருக்கம்

யுவராஜ் சிங்கின் சவாலை ஏற்றதுடன், அதைவிட தரமான சம்பவத்தை செய்து, யுவராஜுக்கு பதில் சவால் விடுத்தார் சச்சின் டெண்டுல்கர்.  

ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கும் இந்த சூழலில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் சக வீரர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சேட், ஃபிட்னெஸை பராமரிப்பது என தங்களை பிசியாகவே வைத்திருக்கின்றனர். பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் செய்துவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், பேட்டின் பக்கவாட்டு பக்கத்தில் பந்தை விடாமல் 25க்கும் அதிகமான ஷாட்டுகளை அடித்து அதை சச்சின், ஹர்பஜன் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு சவாலாகவும் விடுத்தார். 

 

அந்த சவாலை ஏற்ற சச்சின் டெண்டுல்கர், கண்ணை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, பார்க்காமலேயே பேட்டின் பக்கவாட்டு பகுதியில் பந்தை 25 முறை அருமையாக அடித்தார். அதை யுவராஜ் சிங்கிற்கு சவாலாகவும் விடுத்துள்ளார்.

யுவராஜ் கண்ணை திறந்து செய்த செயலை, கண்ணை மூடிக்கொண்டு செய்த சச்சின், தனக்கு யுவராஜ் விடுத்த சவாலுக்கு பதில் சவாலை விடுத்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்