டேவிட் வார்னரின் டிக் டாக் வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகிவரும் நிலையில், தற்போது அவரது பாகுபாலி டிக் டாக் வீடியோ வேற லெவலில் வைரலாகிவருகிறது.
கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சக வீரர்களுடன் இன்ஸ்டாக்ராம் லைவ் சேட், பேட்டிகள், ஆல்டைம் லெவனை தேர்வு செய்வது என வீரர்கள் பொழுதுபோக்கிவருகின்றனர்.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களின் வசனங்கள், பாடல்களுக்கு டிக் டாக்கில் பெர்ஃபார்மன்ஸ் செய்துவருகிறார். அந்த வீடியோக்களும் செம வைரலாகிவருகின்றன.
குறிப்பாக ஐபிஎல்லில் தான் ஆடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புவிசார் மொழியான தெலுங்கில் தான் அதிகமான டிக் டாக் செய்கிறார். தெலுங்கில் பெரிய ஹிட்டடித்த புட்ட பொம்மா பாடலுக்கு அண்மையில் தனது மனைவியுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி லைக்குகளை அள்ளியது. வார்னரின் நடனத்தை கண்டு, அல்லு அர்ஜூன் அவருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் தனது மனைவி மற்றும் மகளுடன், தேவர் மகன் திரைப்படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மியூசிக்கிற்கு நடனம் ஆடியுள்ளார். தனது மனைவி மற்றும் மகளுடன், சூப்பராக வார்னர் ஆடிய நடனம் செம வைரலானது.
இந்நிலையில், தற்போது பாகுபலி திரைப்படத்தின் வசனத்திற்கு அவர் டிக் டாக் செய்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது, இந்தியிலும் பெரிய ஹிட்டடித்த திரைப்படம் பாகுபலி. பாகுபலி 2 திரைப்படத்தில், படத்தின் நாயகன் பிரபாஸ், தலைமை தளபதியாக பதவியேற்கும் இண்டெர்வல் காட்சி, சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காட்சி. பதவியேற்கும்போது, அமரேந்திர பாகுபலியாக நான் என்று பிரபாஸ் சொன்னதும், அரங்கமே அதிருமளவிற்கு ஆரவாரம் இருக்கும். அந்த வசனத்திற்கு தான் டிக் டாக் செய்துள்ளார். அதே காஸ்டியூமில் அவர் செய்துள்ள வீடியோ செம வைரலாகிவருகிறது.
JAI ORANGE ARMY!!! 🧡🙌🏼 | | pic.twitter.com/Fmdh7z2TBx
— SunRisers Hyderabad (@SunRisers)