IND vs NZ: காயத்தால் டி20 தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்..! இந்திய அணி நிர்வாகம் அதிருப்தி

By karthikeyan V  |  First Published Jan 26, 2023, 2:47 PM IST

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
 


இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது. அடுத்ததாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டி20 போட்டி நாளை(ஜனவரி 27) ராஞ்சியில் நடக்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Tap to resize

Latest Videos

2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் லெவன்..! ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்.. கேப்டன் யார் தெரியுமா..?

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்று ஏமாற்றமளித்த பின்னர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறுவதில்லை. வங்கதேசம், இலங்கை ஆகிய 2 டி20 தொடர்களிலும் கேப்டனாக செயல்பட்டு தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் தான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணி ஆடுகிறது.

2024 டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட வலுவான இந்திய அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது. அதன்விளைவாகத்தான், பிரித்வி ஷா மீண்டும் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி ஆகிய இளம் வீரர்கள் ஏற்கனவே அணியில் இருக்கும் நிலையில், பிரித்வி ஷாவும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதுவரை இந்தியாவிற்காக 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில், அதே மணிக்கட்டில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் அடிக்கடி காயம் காரணமாக இந்திய அணிக்காக ஆடமுடியாமல் போவது, பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் இந்திய  அணி நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் விலகினாலும், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, இஷான் கிஷன் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் அணியில் இடம்பெற்றிருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரர் எடுக்கப்படவில்லை. 

டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்.. புறக்கணிக்கப்பட்ட சர்ஃபராஸ் கான்.! வலியையும் வேதனையையும் பகிர்ந்த சர்ஃபராஸ்

இந்திய டி20 அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜித்தேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.
 

click me!