IPL 2021 ருதுராஜ் - டுப்ளெசிஸ் நல்ல தொடக்கம்.. KKRக்கு பிரேக் கொடுத்த சுனில் நரைன்.! டுப்ளெசிஸ் அதிரடி அரைசதம்

Published : Oct 15, 2021, 08:26 PM IST
IPL 2021 ருதுராஜ் - டுப்ளெசிஸ் நல்ல தொடக்கம்.. KKRக்கு பிரேக் கொடுத்த சுனில் நரைன்.! டுப்ளெசிஸ் அதிரடி அரைசதம்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் கேகேஆருக்கு எதிராக சிஎஸ்கேவிற்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இரு அணிகளுமே ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் ஆடுகிறது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், டுளெசிஸும் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்ப்ளேயில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அருமையாக ஆடினர். 

ருதுராஜும் டுப்ளெசிஸும் இணைந்து 8 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். இரண்டரை நிமிட பிரேக் முடிந்து வந்ததும், முதல் ஓவரிலேயே ருதுராஜ் 32 ரன்களுக்கு சுனில் நரைனின் பந்தில் ஆட்டமிழந்தார்.  ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தாலும், டுப்ளெசிஸும் உத்தப்பாவும் இணைந்து நன்றாக ஆடிவருகின்றனர். ஷகிப் அல் ஹசன் வீசிய 9வது ஓவரில் டுப்ளெசிஸ் மற்றும் உத்தப்பா ஆகிய இருவருமே தலா ஒரு சிக்ஸரை விளாசினர்.

அதிரடியாக ஆடிய டுப்ளெசிஸ் அரைசதம் அடித்தார். அரைசதம் கடந்த டுப்ளெசிஸுடன் இணைந்து உத்தப்பாவும் நன்றாக அடித்து ஆடிவருகிறார்.

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி