IPL 2021 ஃபைனலில் சிஎஸ்கே - கேகேஆர் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Oct 15, 2021, 7:26 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய பணித்தது.
 

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில், ஏற்கனவே 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கேவும், 2 முறை கோப்பையை வென்றுள்ள கேகேஆரும் மோதுகின்றன.

துபாயில் இன்று நடக்கும் ஃபைனலில் 3வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கேகேஆரும், 4வது முறையாக கோப்பையை தூக்கும் முனைப்பில் சிஎஸ்கேவும் மோதுகின்றன. டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

எனவே சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இரு அணிகளின் ஆடும் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகின்றன. 

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.
 

click me!