ரிஷப் பண்ட்டை தூக்கிட்டு டெல்லி அணியின் கேப்டனாக இந்த சீனியர் வீரரை நியமனம் செய்யுங்க..! கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 15, 2021, 6:50 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இன்றுடன் முடிகிறது. இன்று(அக்டோபர் 15) துபாயில் நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. 

கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் ஃபைனல் வரை சென்று கோப்பையை நழுவவிட்ட டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் பிளே ஆஃபிற்கு முன்னேறி, 2வது தகுதிச்சுற்று போட்டியில் தோற்று வெளியேறியது.

ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனின் முதல் பாகத்தில் காயம் காரணமாக ஆடாததால், ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக ஆடினாலும், அவரது கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. இக்கட்டான நேரங்களில் அவரது கேப்டன்சி முடிவுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. 

ஆனாலும் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவரும் நிலையில், அவரை கேப்டன்சியிலிருந்தே நீக்கவேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - யப்பா கோலி தயவுசெய்து நீ ஓபனிங்கில் இறங்காதப்பா..! அவரையே இறக்கிவிடு.. சேவாக் அதிரடி

அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை டெல்லி அணி தக்கவைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கௌதம் கம்பீர், அஷ்வினின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர். எனவே அவரை அணியில் தக்கவைப்பது மட்டுமல்லாது, நான் டெல்லி அணியின் அங்கமாக இருந்தால் அடுத்த சீசனில் அஷ்வினை டெல்லி அணியின் கேப்டனாகவே நியமிப்பேன் என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
 
அஷ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணியை 2 சீசன்களில் கேப்டனாக இருந்து வழிநடத்திய கேப்டன்சி அனுபவம் கொண்டவர்.
 

click me!