IPL 2021 ஃபைனலில் சிஎஸ்கே - கேகேஆர் பலப்பரீட்சை..! எந்த அணி கோப்பையை வெல்லும்..? ஆகாஷ் சோப்ரா அதிரடி ஆருடம்

By karthikeyan VFirst Published Oct 15, 2021, 3:12 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதும் நிலையில், இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ஆருடமும் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இன்றுடன் முடிகிறது. இன்று துபாயில் நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளுமே கோப்பையை வென்ற அணிகள் தான். 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும், 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி, ஃபைனலுக்கு முன்னேறியது. இந்த சீசன் முழுவதுமே சிஎஸ்கே அணி அபாரமாக ஆடியது. ஆனால் கேகேஆர் அணியோ இந்தியாவில் நடந்த இந்த சீசனின் முதல் பாகத்தில் சரியாக ஆடாமல் 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்ற கேகேஆர் அணி, அமீரகத்தில் அசத்தலாக ஆடி வெற்றிகளை குவித்து ஃபைனல் வரை சென்றுள்ளது.

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க - KKR-க்கு கிடைத்த அந்த சான்ஸ் எங்களுக்கு கிடைக்காம போச்சு! அந்த பையன் கண்டிப்பா இந்தியாவுக்கு ஆடுவார்- பாண்டிங்

இரு அணிகளின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.

ஃபைனலில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி தான் கோப்பையை வெல்லும் என்று ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார். 
 

click me!