KKR-க்கு கிடைத்த அந்த சான்ஸ் எங்களுக்கு கிடைக்காம போச்சு! அந்த பையன் கண்டிப்பா இந்தியாவுக்கு ஆடுவார்- பாண்டிங்

Published : Oct 14, 2021, 10:28 PM IST
KKR-க்கு கிடைத்த அந்த சான்ஸ் எங்களுக்கு கிடைக்காம போச்சு! அந்த பையன் கண்டிப்பா இந்தியாவுக்கு ஆடுவார்- பாண்டிங்

சுருக்கம்

கேகேஆர் அணியின் இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் கண்டிப்பாக இந்திய அணிக்காக ஆடுவார் என்று டெல்லி கேபிடள்ஸ் அணி தலைமை பயிற்சியாளரும் ஆஸி., முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்  

ஐபிஎல் 14வது சீசன் அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் கேகேஆர் அணியில் அறிமுகமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர், 9 போட்டிகளில் 320 ரன்களை குவித்தார். அமீரகத்தில் ஆடிய 7 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் வெங்கடேஷ் ஐயர்.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியிலும் வெங்கடேஷ் ஐயரின் அரைசதத்தால் தான்(55) கேகேஆர் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடள்ஸ் நிர்ணயித்த 136 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணி வெற்றி பெற்றதற்கு வெங்கடேஷ் ஐயரின் பொறுப்பான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த சீசனில் கிடைத்த குறைவான வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி அருமையாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், அதற்குள்ளாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பவுலராக அணியில் எடுக்கப்பட்டார்.

மிகச்சிறந்த திறமைசாலியான வெங்கடேஷ் ஐயர் மிக விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்நிலையில், வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசிய டெல்லி கேபிடள்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், கேகேஆர் அணி பேட்டிங் ஆடியபோது இருந்த பனிப்பொழிவு, அந்த அணியின் பேட்டிங்கை எளிதாக்கியது. ஆனால் அப்படியொரு வாய்ப்பு எங்கள் அணிக்கு(டெல்லி) கிடைக்கவில்லை. வெங்கடேஷ் ஐயர் அருமையான வீரர். விரைவில் அவர் இந்தியாவிற்காக ஆடுவார் என்று பாண்டிங் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா