யப்பா கோலி தயவுசெய்து நீ ஓபனிங்கில் இறங்காதப்பா..! அவரையே இறக்கிவிடு.. சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 14, 2021, 8:54 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கக்கூடாது என்று முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய டி20 அணியின் ரெகுலர் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் தான். கேஎல் ராகுல் செம ஃபார்மில் உள்ளார். ஐபிஎல் 14வது சீசனில் அபாரமாக ஆடி இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த(ஃபைனலுக்கு முன்பு வரை) வீரராக ராகுல் திகழ்கிறார்.

ரோஹித்துடன் ராகுல் தான் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிவந்தார். ஆனால் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக ஆடிய கேப்டன் விராட் கோலி, டி20 உலக கோப்பையிலும், ரோஹித்துடன் தானே தொடக்க வீரராக இறங்கவிருப்பதாக தெரிவித்ததுடன், ஐபிஎல்லிலும் ஆர்சிபி அணிக்காக அவரே தொடக்க வீரராக இறங்கினார். அதனால், அவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க - இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்..?

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் நான் இருந்தால், கோலியை 3ம் வரிசையிலேயே இறங்குமாறு வலியுறுத்தி அதை அவரை  ஏற்கச்செய்வேன். ராகுல் ஓபனிங் செய்வது அணிக்கு நல்லது. கங்குலி, ராகுல் டிராவிட், கும்ப்ளே, தோனி ஆகிய சிறந்த கேப்டன்கள் அனைவருமே, ஒரே கருத்தை பல பேர் எடுத்துரைத்தால் அந்த கருத்துக்கு செவிமடுப்பார்கள். ஆனால் இப்போது கோலியிடம் அந்தமாதிரி யாரும் எடுத்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை. ராகுல் பேட்டிங் ஆடும் விதத்திற்கு, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கி, ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடியதை போல முழு சுதந்திரத்துடன் பேட்டிங் ஆடினால், அவர் அபாயகரமான வீரர் என்று சேவாக் கூறியுள்ளார்.
 

click me!