IPL 2021 #CSKvsKKR இறுதிப்போட்டிக்கான சிஎஸ்கே - கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Oct 14, 2021, 6:43 PM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 14வது சீசனின் இறுதி போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் நாளையுடன் முடிகிறது. நாளை துபாயில் நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளுமே கோப்பையை வென்ற அணிகள் தான். 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும், 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

2014ம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள கேகேஆர் அணி, ஐபிஎல் ஃபைனலில் வைத்திருக்கும் 100 சதவிகித வெற்றி விகித சாதனையை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது கேகேஆர் அணி. கடந்த சீசனில் முதல்முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அதற்கு பரிகாரமாக இந்த சீசனில் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ஏற்கனவே கோப்பையை ஒருசில முறைகள் வென்றுள்ள சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் நிலையில், இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இதையும் படிங்க - டிசிப்ளின் இல்லையே டி.கே..! எல்லை மீறிட்டீங்க; பார்த்து நடந்துக்கங்க.. வார்னிங் வாங்கிய தினேஷ் கார்த்திக்

இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனும் சிறப்பாக செட் ஆகிவிட்டபடியால், இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இரு அணிகளுமே களமிறங்கும். 

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.
 

click me!