IPL 2021 #CSKvsKKR ஃபைனலில் வெற்றி பெற்று அந்த அணி தான் ஐபிஎல் கோப்பையை தூக்கும்.! டேல் ஸ்டெய்ன் அதிரடி ஆருடம்

By karthikeyan VFirst Published Oct 14, 2021, 5:38 PM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று டேல் ஸ்டெய்ன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் நாளையுடன் முடிகிறது. நாளை துபாயில் நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளுமே கோப்பையை வென்ற அணிகள் தான். 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும், 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

2014ம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள கேகேஆர் அணி, ஐபிஎல் ஃபைனலில் வைத்திருக்கும் 100 சதவிகித வெற்றி விகித சாதனையை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது கேகேஆர் அணி. கடந்த சீசனில் முதல்முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அதற்கு பரிகாரமாக இந்த சீசனில் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணி அபாரமாக ஆடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்திலேயே நீடித்தது. ஆனால் கேகேஆர் அணியோ, இந்தியாவில் நடந்த முதல் 7 லீக் போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருந்த நிலையில், அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் தொடர் வெற்றிகளை குவித்து 14 புள்ளிகளை பெற்று பிளே ஆஃபிற்கு 4வது அணியாக முன்னேறியது.

இதையும் படிங்க - டிசிப்ளின் இல்லையே டி.கே..! எல்லை மீறிட்டீங்க; பார்த்து நடந்துக்கங்க.. வார்னிங் வாங்கிய தினேஷ் கார்த்திக்

எலிமினேட்டரில் ஆர்சிபியையும், 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸையும் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது கேகேஆர் அணி. கேகேஆர் அணி இந்த சீசனின் அமீரக பாகத்தில் அருமையாக ஆடி நல்ல முமெண்ட்டத்தை பெற்றுள்ளது. எனவே அந்த தொடர் வெற்றிகள் கொடுத்த அதே தன்னம்பிக்கையுடன் சிஎஸ்கேவையும் எதிர்கொள்கிறது.

இந்நிலையில், சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஃபைனல் குறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், நான் நம்பர்களை நம்புபவன். மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் மோசமான ஃபார்ம், சில தவறான முடிவுகள் ஆகியவை கேகேஆருக்கு ஃபைனலில் பெரும் பாதிப்பாக அமையலாம். டெல்லிக்கு எதிரான போட்டியிலேயே அதை பார்த்தோம். ஃபைனலிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணி அபாரமாக ஆடிவருகிறது. தோனி அருமையாக கேப்டன்சி செய்துவருகிறார். ஒரு அணியாக சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். எனவே இந்த சீசனில் சிஎஸ்கே அணி மீண்டுமொருமுறை கோப்பையை தூக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
 

click me!