IPL 2021 ஃபைனல்: அணிக்கு நல்லதுனா மோர்கன் அவரே டீம்ல இருந்து ஒதுங்கக்கூட தயங்கமாட்டார்..! KKR கேப்டனே விலகல்

By karthikeyan VFirst Published Oct 14, 2021, 10:34 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் கேகேஆர் அணி கேப்டன் மோர்கன், அணிக்கு நல்லது என்றால் தன்னைத்தானே அணியிலிருந்து ஒதுக்கக்கூட தயங்கமாட்டார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. ஃபைனல் துபாயில் நாளை நடக்கிறது. ஐபிஎல் 14வது சீசனில் இந்தியாவில் நடந்த முதல் 7 லீக் போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருந்த கேகேஆர் அணி, அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் தொடர் வெற்றிகளை குவித்து 14 புள்ளிகளை பெற்று பிளே ஆஃபிற்கு 4வது அணியாக முன்னேறியது.

எலிமினேட்டரில் ஆர்சிபியையும், 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸையும் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது கேகேஆர் அணி. கேகேஆர் அணி இந்த சீசனின் அமீரக பாகத்தில் அருமையாக ஆடி நல்ல முமெண்ட்டத்தை பெற்றுள்ளது. எனவே அந்த தொடர் வெற்றிகள் கொடுத்த அதே தன்னம்பிக்கையுடன் சிஎஸ்கேவையும் எதிர்கொள்கிறது.

கேகேஆர் அணியின் ஒரே பிரச்னை அந்த அணியின் கேப்டன் ஒயின் மோர்கனின் மோசமான ஃபார்ம் தான். அதுமட்டுமல்லாது, அமீரகத்தில் நிறைய போட்டிகளை ஸ்லோ பிட்ச்சான ஷார்ஜாவில் ஆடியது கேகேஆர் அணி. ஷார்ஜா பிட்ச்சில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரின் பவுலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் தான் அந்த அணியால் தொடர் வெற்றிகளை பெற முடிந்தது.

ஆனால் ஃபைனல் துபாயில் நடக்கவுள்ள நிலையில், அணியின் நலன் கருதி, ஃபார்மில் இல்லாத தன்னைத்தானே கேப்டன் மோர்கன் அணியிலிருந்து ஒதுக்கிக்கொண்டு, ஆண்ட்ரே ரசலை அணியில் சேர்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், பிட்ச்சை பொறுத்து கேகேஆர் அணி முடிவுகளை எடுக்கவேண்டும். ஷார்ஜா ஸ்லோ பிட்ச்சில் ஆடியதால் அந்த அணி காம்பினேஷன் சிறப்பாக செட் ஆகியிருந்தது. எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இறுதிப்போட்டி துபாயில் நடக்கவுள்ளது. துபாய் ஆடுகளம் வேறு மாதிரி இருக்கும். எனவே அதற்கேற்ப அணி தேர்வு செய்வது அவசியம்.

ஆண்ட்ரே ரசலின் பவுலிங் மற்றும் அவர் வேகமாக 25-30 ரன்கள் அடித்தால் அது கேகேஆர் அணிக்கு பெரிய உதவிகரமாக இருக்கும். ரசலை சேர்த்தால் ஷகிப் அல் ஹசனோ அல்லது மோர்கனோ நீக்கப்பட வேண்டும். அணியின் நலன் கருதி ஃபார்மில் இல்லாத மோர்கன் அவரை அவரே அணியிலிருந்து ஒதுக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனக்கு மோர்கனை பற்றி நன்கு தெரியும். அணிக்கு நல்லது என்றால் எதையும் செய்ய தயங்கமாட்டார். ஆண்ட்ரே ரசலுக்கு வழிவிட அவரே ஒதுங்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மைக்கேல் வான் தெரிவித்தார்.
 

click me!