TNPL 2022: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி ரூபி திருச்சி வாரியர்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 24, 2022, 11:04 PM IST
Highlights

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் நேற்று(ஜூன்23) தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

இன்று நடந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸும் ரூபி திருச்சி வாரியர்ஸும் மோதின. நெல்லையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

முரளி விஜய், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கனேஷ்(விக்கெட் கீப்பர்), முகமது அட்னன் கான், ஆண்டனி தாஸ், சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, யாழ் அருண்மொழி, அஜய் கிருஷ்ணா.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஏஜி பிரதீப், மணிபாரதி (விக்கெட் கீப்பர்), விஷால் வைத்யா, ஆர் விவேக், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், எம்.சிலம்பரசன், ரங்கராஜ் சுதேஷ், மனோஜ் குமார், கரபரம்பில் மோனிஷ்.

முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் பேட்டிங் மந்தமாக ஆடினர். தொடக்க வீரர் ஏஜி பிரதீப் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஹரி நிஷாந்த் 15 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - SL vs AUS: ஈசியான இலக்கையே கஷ்டப்பட்டு அடித்த ஆஸ்திரேலியா..! தோல்வி பயத்தை காட்டிய இலங்கை

அதன்பின்னர் விஷால் வைத்யா (16), ஹரிஹரன்(8), விவேக்(6) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். திண்டுக்கல் வீரர்கள் அதிகமான டாட் பந்துகளை விட்டனர். மோனிஷ் 24 ரன்கள் அடித்தார். எல்.விக்னேஷ் 20வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாச, 20 ஓவரில் 144ரன்கள் அடித்து, 145 ரன்கள் என்ற சவாலான இலக்கை திருச்சி வாரியர்ஸுக்கு நிர்ணயித்தது.

145 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் முரளி விஜய் 8 ரன்னிலும், அமித் சாத்விக் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் நிதிஷ் ராஜகோபாலும், ஆதித்ய கணேஷும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். அதிரடியாக பேட்டிங் ஆடிய நிதிஷ் அரைசதம் அடித்தார். நிதிஷ் 48 பந்தில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 19 ஓவரில் 145 ரன்கள் என்ற இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!