TNPL 2022: 53 டாட் பந்துகள் ஆடிய திண்டுக்கல் அணி..! விக்னேஷின் ஃபினிஷிங்கால் திருச்சி அணிக்கு சவாலான இலக்கு

Published : Jun 24, 2022, 09:14 PM IST
TNPL 2022: 53 டாட் பந்துகள் ஆடிய திண்டுக்கல் அணி..! விக்னேஷின் ஃபினிஷிங்கால் திருச்சி அணிக்கு சவாலான இலக்கு

சுருக்கம்

ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 144 ரன்கள் அடித்து, 145 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் நேற்று(ஜூன்23) தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

இன்று நடந்துவரும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸும் ரூபி திருச்சி வாரியர்ஸும் ஆடிவருகின்றன. நெல்லையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

முரளி விஜய், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கனேஷ்(விக்கெட் கீப்பர்), முகமது அட்னன் கான், ஆண்டனி தாஸ், சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, யாழ் அருண்மொழி, அஜய் கிருஷ்ணா.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஏஜி பிரதீப், மணிபாரதி (விக்கெட் கீப்பர்), விஷால் வைத்யா, ஆர் விவேக், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், எம்.சிலம்பரசன், ரங்கராஜ் சுதேஷ், மனோஜ் குமார், கரபரம்பில் மோனிஷ்.

முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் பேட்டிங் மந்தமாக ஆடினர். தொடக்க வீரர் ஏஜி பிரதீப் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஹரி நிஷாந்த் 15 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் விஷால் வைத்யா (16), ஹரிஹரன்(8), விவேக்(6) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். திண்டுக்கல் வீரர்கள் அதிகமான டாட் பந்துகளை விட்டனர். மோனிஷ் 24 ரன்கள் அடித்தார். எல்.விக்னேஷ் 20வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாச, 20 ஓவரில் 144ரன்கள் அடித்து, 145 ரன்கள் என்ற சவாலான இலக்கை திருச்சி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க - ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்; இப்போ லாகூரில் துணிக்கடை ஓனர்! 9 வருஷமா கிரிக்கெட்டே பார்க்காத கொடுமை

இந்த இன்னிங்ஸில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 53 பந்துகளில் ரன்னே அடிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் 53 டாட்பந்துகள் என்பது படுமோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறது. ஆனால் 53 டாட் பந்துகள் இருந்தும் கூட, நிஷாந்த்தின் அதிரடியான தொடக்கம் மற்றும் எல்.விக்னேஷின் ஃபினிஷிங் ஆகியவற்றால் 20 ஓவரில் 144 ரன்கள் அடித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?