கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கேகேஆர், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யுஸ்வேந்திர சகால் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு, வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் தோனி - ஹர்பஜன் சிங்!
பின்னர் எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த்னர். சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 147 ரன்கள் எடுத்திருந்த போது கேகேஆரின் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா 13ஆவது ஓவரை வீசினார். அப்போது, 12.5ஆவது பந்தை அவர் லெக் சைடு திசையில் வைடாக வீசினார். அதனை வீட்டிருந்தால் பவுண்டரி சென்றிருக்கும். அப்படி பவுண்டரி சென்றிருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும். சஞ்சு சாம்சன் அடித்திருந்தால் அரைசதம் அடித்திருப்பார்.
அவர், யஷஸ்வி சதம் அடிக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்துள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அவர் அந்த பந்தை தடுத்துவிட்டார். ரன் ஏதும் அடிக்கவில்லை. இருந்தாலும் 13ஆவது ஓவரில் பேட்டிங் ஆடிய யஷஸ்வி சிக்ஸர் அடித்திருந்தால் சதம் அடித்திருப்பார். ஆனால் அவர் பவுண்டரி மட்டுமே அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். யஷஸ்வி 98 ரன்னுடனும், சாம்சன் 48 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்கர் ஹீரோக்களை சந்தித்த தோனி: நம்பர் 7 ஜெர்சியை கொடுத்து கௌரவப்படுத்திய சிஎஸ்கே!
இறுதியாக 13.1 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு புள்ளிப்பட்டியலிலும் 12 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு பெரும் தலைவலியாக அமையும்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி - கேஎல் ராகுல்!
தற்போது 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும். 11, 10, 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ள மற்ற அணிகளுக்கு கண்டிப்பாக இது தலைவலியை தான் ஏற்படுத்தும். அதோடு, இந்த தொடரிலிருந்து அந்த அணிகள் வெளியேற வேண்டிய நிலை தான் உண்டாகும்.