சொல்பேச்சு கேட்காத ரெய்னா.. செம கடுப்பான தோனி..!

By karthikeyan VFirst Published Aug 19, 2020, 10:41 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னா மீது தோனி கோபமடைந்த சம்பவம் குறித்து ஆர்பி சிங் பேசியுள்ளார்.
 

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. நெருக்கடியான சூழல்களிலும் பதற்றப்படாமல், நேர்மறையான சிந்தனையோடு வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதில் வல்லவர் என்பதால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்படுகிறார். 

தோனி பெரும்பாலும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டார். கோபம் வந்தாலும் அதை அரிதினும் அரிதாகத்தான் வெளிப்படுத்துவார். 

2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிபி தொடரில் அம்பயர் பில்லி பௌடனுடனான வாக்குவாதம், கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில், நோ பால் சர்ச்சையில் அம்பயர்களுடனான வாக்குவாதம், மனீஷ் பாண்டே இரண்டாவது ரன்னுக்கு வராததால் அவரை திட்டியது, தீபக் சாஹர் மீதான கோபம் என அரிதினும் அரிதாக இதுமாதிரியாக சில சமயங்களில் கோபப்பட்டிருக்கிறார்.

சொல்பேச்சு கேட்காத வீரர்களை சில நேரங்களில் கடிந்துகொண்டுள்ளார். 2018 ஆசிய கோப்பையில் கூட, தனது பேச்சை கேட்காத குல்தீப் யாதவிடம், சொல்வதை கேள்; இல்லையெனில் பவுலரை மாற்றிவிடுவேன் என்றார். அதேபோல, குல்தீப்பிடம் அதற்கு முன், 300 போட்டிகளில் ஆடிய நான் முட்டாளா..? என்று ஒருமுறை கடிந்தார். இதுமாதிரி சில முறை வீரர்களை கடிந்துள்ளார் தோனி. 

இந்நிலையில், அந்த வரிசையில், தோனி தனது ஆஸ்தான வீரரும் நெருங்கிய நண்பருமான ரெய்னா மீது கோபமடைந்த சம்பவத்தை ஆர்பி சிங் பகிர்ந்துள்ளார். தோனியின் கேப்டன்சியில் அறிமுகமான ஆர்பி சிங், தோனிக்கு நெருக்கமானவர்களில் ஒருவரும் கூட.

இந்நிலையில், இதுகுறித்து கிரிக்கெட்.காமிற்கு பேசிய ஆர்பி சிங், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில், கவர் திசையில் ஃபீல்டிங் செய்த ரெய்னா, முன்னோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தார். அதைக்கவனித்த தோனி, முன்னால் வர வேண்டாம் என்றார். ஆனால் அதை கேட்காத ரெய்னா, முன்னோக்கி வந்ததால், ஒரு பந்தை கோட்டைவிட்டார். இதையடுத்து, பின்னால் போ என தோனி அதட்டினார். தோனி பெரிதாக கத்தவோ கதறவோ எல்லாம் இல்லை. ஆனால் அவருக்கும் கோபம் வரும் என்றார் ஆர்பி சிங்.
 

click me!