வரிசையாக நடையை கட்டிய வீராங்கனைகள் – கடைசில கை கொடுத்த எல்லீஸ் பெர்ரி – 135 ரன்களில் சுருண்ட ஆரிசிபி!

By Rsiva kumarFirst Published Mar 15, 2024, 9:22 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான லிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே ஷோஃபி டிவைன் 10 ரன்களில் ஹேலி மேத்யூஸ் பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்த ஓவரின் 2.2 பந்திலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களில் நாட் ஷிவர் பிரண்ட் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திசா கசாட் ரன் ஏதும் எடுக்காமலும், ரிச்சா கோஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆர்சிபி அணியானது 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் எல்லீஸ் பெர்ரி மட்டும் நிதானமாக விளையாடி ரன்கள் எடுத்தார். அவர், 50 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் மோலினெக்ஸ் 11 ரன்கள் எடுக்க, வார்ஹாம் 18 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹேலி மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் சைகா இஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

மும்பை இந்தியன்ஸ் மகளிர்:

ஹேலி மேத்யூஸ், யாஷ்திகா பாட்டீயா, நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், சஜீவன் சஞ்சனா, ஹூமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி மோலினெக்ஸ், எல்லிஸ் பெர்ரி, ஷோஃபி டிவைன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வார்காம், திஷா கஸாட், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாகூர் சிங்.

click me!