MIW vs RCBW, WPL 2024 Eliminator: இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது? டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published Mar 15, 2024, 7:30 PM IST

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி வெளியேறும். இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்

மும்பை இந்தியன்ஸ் மகளிர்:

Tap to resize

Latest Videos

ஹேலி மேத்யூஸ், யாஷ்திகா பாட்டீயா, நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், சஜீவன் சஞ்சனா, ஹூமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி மோலினெக்ஸ், எல்லிஸ் பெர்ரி, ஷோஃபி டிவைன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வார்காம், திஷா கஸாட், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாகூர் சிங்.

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 3 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடிய மும்பை 1ல் வெற்றியும், ஒரு போட்டியில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன.

click me!