ஐபிஎல் 2020: இந்த தடவை மிஸ்ஸே ஆகக்கூடாது.. ஆர்சிபியின் அதிரடி கணக்கு.. பெஸ்ட் பிளேயிங் லெவன்

By karthikeyan VFirst Published Mar 6, 2020, 11:05 AM IST
Highlights

ஐபிஎல்லில் முதல் கோப்பையை வெல்ல துடித்துகொண்டிருக்கும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வென்றிராத ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் வழக்கம்போலவே இந்த முறையாவது முதல் முறையாக டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. 

ஆர்சிபி அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் தலைசிறந்த வீரர்கள் இருந்தும் கூட, அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த அணியில், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளை போல கோர் டீம் வலுவாக இல்லாததும், ஒவ்வொரு சீசனிலும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பதும், அணியில் ஆடும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் வழங்கப்படாடததும்தான், அந்த அணியின் தோல்விக்கு காரணம். 

அதை உணர்ந்த ஆர்சிபி அணி நிர்வாகம், இந்த சீசனில் கோர் டீமை வலுப்படுத்தும் முனைப்பில் உள்ளது. இந்த சீசனுக்கான ஏலத்தில் கிறிஸ் மோரிஸ், ஆரோன் ஃபின்ச் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. 

வரவுள்ள 13வது சீசனில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ள ஆர்சிபி அணியின் ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேல் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் இறங்குவார்கள். மூன்றாம் வரிசையில் விராட் கோலி, நான்காம் வரிசையில் டிவில்லியர்ஸ் என்பது உறுதியானது. அதன்பின்னர் மொயின் அலி, தேவ்தத் படிக்கல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருப்பார்கள். 

வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர். சுந்தரின் பேட்டிங் வெகுவாக மேம்பட்டிருக்கிறது என்பதால் அவர் பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார். மிதவேகப்பந்து ஆல்ரவுண்டராக ஷிவம் துபே ஆடுவார். அவரும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர். 

இவர்களுடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் இருக்கிறார். ஸ்பின்னராக சாஹல், ஃபாஸ்ட் பவுலராக நவ்தீப் சைனி இருப்பார்கள். வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலராக கேன் ரிச்சர்ட்ஸன் ஆடுவார். ஆடுகளத்தின் தன்மை, எதிரணியின் பவர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப, கேன் ரிச்சர்ட்ஸனோ கிறிஸ் மோரிஸோ ஆடுவார்கள். 

ஃபின்ச், டிவில்லியர்ஸ், மொயின் அலி, கேன் ரிச்சர்ட்ஸன்/கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தான் பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஜோஷ் ஃபிலிப், டேல் ஸ்டெய்ன் ஆகியோரெல்லாம் எப்போதாவது இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச், பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், மொயின் அலி, ஷிவம் துபே, ஜோஷ் ஃபிலிப்/கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ்/கேன் ரிச்சர்ட்ஸன்.

Also Read - புதிய தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி - கேப்டன் கோலி.. சுவாரஸ்ய தகவல்

ஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனியும் உமேஷ் யாதவும் ஆடினால், கேன் ரிச்சர்ட்ஸனுக்கான தேவையில்லை. எனெவே ஜோஷ் ஃபிலிப்போ அல்லது கிறிஸ் மோரிஸோ ஆடும் லெவனில் கண்டிப்பாக இடம்பெறுவார்கள்.

Also Read - ஐபிஎல் 2020: முதல் முறை கோப்பையை வெல்ல துடிக்கும் டெல்லி கேபிடள்ஸின் பெஸ்ட் ஆடும் லெவன்.. செம டீம்
 

click me!