புதிய தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி - கேப்டன் கோலி.. சுவாரஸ்ய தகவல்

By karthikeyan VFirst Published Mar 6, 2020, 10:15 AM IST
Highlights

இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுனில் ஜோஷி, முன்னாள் கேப்டன் கங்குலி கூட மட்டுமல்ல; தற்போதைய கேப்டன் விராட் கோலியுடனும் ஆடியிருக்கிறார். 
 

இந்திய அணியின் தேர்வுக்குழுவில் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக்காலமும் முடிந்த நிலையில், அந்த பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் அதிலிருந்து சுனில் ஜோஷி, வெங்கடேஷ் பிரசாத், லக்‌ஷமண் சிவராமகிருஷ்ணன், ஹர்வீந்தர் சிங், ராஜேஷ் சவுகான் ஆகியோர் பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டன. 

இவர்களை மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு(சிஏசி) நேர்காணல் செய்தது. இதையடுத்து சுனில் ஜோஷி தேர்வுக்குழு தலைவராகவும், முன்னாள் உறுப்பினர் ககன் கோடாவின் இடத்திற்கு ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். 

புதிய தலைமை தேர்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுனில் ஜோஷி, இந்திய அணியில் 1996ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டுவரை ஆடியவர். இடது கை ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டரான சுனில் ஜோஷி, 15 டெஸ்ட் போட்டிகளிலும் 69 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி முறையே 41 மற்றும் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 615 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

கங்குலி முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு கேப்டன்சி செய்த போட்டியில் தான், சுனில் ஜோஷி தனது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  2000-ல் வங்கதேசத்துக்கு எதிராக தாக்காவில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் 142 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முன்னாள் கேப்டன் கங்குலியுடன் சேர்ந்து ஆடி, டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொண்ட சுனில் ஜோஷி, தற்போதைய கேப்டனான விராட் கோலியுடனும் இணைந்து ஆடியுள்ளார். ஐபிஎல் 2008ல் தொடங்கப்பட்டபோது, முதல் சீசனில் ஆர்சிபி அணியில் ஆடினார் சுனில் ஜோஷி. அப்போது அவருடைய வயது 37. அந்த சீசனில் ஆர்சிபி அணியில் இளம் வீரரான கோலியும் ஆடினார். அண்டர் 19 உலக கோப்பையை வென்றிருந்த அப்போதைய இளம் வீரரான கோலியை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் சுனில் ஜோஷியும் கோலியும் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தனர். சுனில் ஜோஷி ஐபிஎல்லில் ஆடியது அந்த ஒரே சீசன் தான். அதில் 4 போட்டிகளில் மட்டுமே ஜோஷி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read - மலிங்காவுக்கு வயசு வெறும் நம்பர் தான்.. இந்த வீடியோவை பாருங்க புரியும்

அந்தவகையில், முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி மற்றும் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆகிய இருவருடனும் சேர்ந்து ஆடியவர் சுனில் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!