துபாயில் தொடங்கிய ஐபிஎல் முதல் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் ரூ7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் முறையாக ஆண்களுக்கான ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்துகிறார். இந்த ஏலத்தின் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ. 2.80 கோடிக்கு விளையாடி வந்த ரோவ்மன் பவலை தற்போது ஆர் ஆர் அணியானது ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.