ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கொஞ்சம் நல்ல பிளேயர்ஸ் எடுத்து போடுங்க, காவ்யா மாறன் முகத்தை பார்க்கவே பாவமா இருக்கு என்று கூறியிருந்தார்.
இந்தியாவில் நடத்தப்படும் 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏலம் இன்று பிற்பகல் 1 மணிக்கு துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் பிரம்மாண்ட அளவில் நடக்க இருக்கிறது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஒரே ஒரு முறை அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு டிராபியை கைப்பற்றியது.
IPL Auction 2024: அணியின் பர்ஸ் தொகை, எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள், ஏலம் நடத்துபவர் யார்?
அதன் பிறகு ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஒவ்வொரு முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது லீக் சுற்றுகளுடன் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் நடிப்பில், சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஏகபோக வரவேற்பு பெற்றது.
As Said all the best for 🤣🤣🤣 | pic.twitter.com/jWnMUh5KJL
— Suresh balaji (@surbalutwt)
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் கலாநிதிமாறனுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நல்ல பிளேயர்ஸ் எடுத்து போடுங்க. காவ்யா மாறனை டிவியில் பார்க்க பாவமா இருக்கு. ஆதலால், நல்ல பிளேயர்ஸ் எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
IPL 2024 Auction Dubai: மார்ச் 22ல் ஐபிஎல் தொடங்க வாய்ப்பு – தேர்தலுக்கு பிறகு இறுதி தேதி முடிவு!
இந்த நிலையில், தான் ரஜினிகாந்த் சொன்னதற்கான நேரமும், காலமும் வந்துவிட்டது. இன்று துபாயில் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தங்களது அணியில் நல்ல வீரர்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவ்யா மாறன் தான் தங்களது அணிக்காக வீரர்களை ஏலம் எடுப்பார். ஆதலால், கண்டிப்பாக திறமை வாய்ந்த வீரர்களை அணியில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் அணியின் பர்ஸ் தொகை ரூ.34 கோடி ஆக உள்ளது. இந்த அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமே 6 வீரர்கள் தான் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
இந்திய வீரர்கள்:
அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், மாயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மாயங்க் மார்கண்டே, உபேந்திரா சிங், யாதவ், உம்பன் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி.
வெளிநாட்டு வீரர்கள்:
ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சென், கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், பசல்ஹக் ஃபரூக்கி.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
இந்திய வீரர்கள்:
சமார்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவாந்த் சர்மா
வெளிநாட்டு வீரர்கள்:
ஹாரி ஃப்ரூக், அகீல் ஹூசைன், அடில் ரஷீத்