தோனிக்கு நன்றிக்கடனா உலக கோப்பையை கொடுப்பாரு ரோஹித்.. சின்ன வயசு பயிற்சியாளர் நம்பிக்கை

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 5:47 PM IST
Highlights

இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களுடன் 647 ரன்களை குவித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் இருக்கும் ஃபார்முக்கு நாக் அவுட் போட்டிகளிலும் கண்டிப்பாக மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களுடன் 647 ரன்களை குவித்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் இருக்கும் ஃபார்முக்கு நாக் அவுட் போட்டிகளிலும் கண்டிப்பாக மிரட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. 

இந்த உலக கோப்பை தான் தோனிக்கு கடைசி உலக கோப்பை. அந்தவகையில், ரோஹித்தை தொடக்க வீரராக களமிறக்கி அவரது கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த தோனிக்கு இந்த உலக கோப்பையை ரோஹித் பரிசளிப்பார் என்று ரோஹித்தின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்த தொடக்க காலத்தில் மிடில் ஆர்டரில் இறங்கி சோபிக்கவில்லை. அவரை அப்போதைய கேப்டன் தோனி தான் தொடக்க வீரராக புரோமோட் செய்தார். தொடக்க வீரராக இறக்கப்பட்ட பிறகு அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா, வேறு அவதாரம் எடுத்தார். 3 இரட்டை சதங்கள், இந்த உலக கோப்பையில் 5 சதங்கள் என ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 
 
click me!