முதல் பந்துலயே ரிவியூவை இழந்த இந்தியா.. முதல் விக்கெட்டை அசால்ட்டா வீழ்த்திய பும்ரா.. முதல் ரன்னை எடுக்கவே திணறிய நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 3:34 PM IST
Highlights

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஜடேஜா, சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகிய 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் நிகோல்ஸும் களத்திற்கு வந்தனர்.
 

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்திய அணி இந்த போட்டியிலும் 5 பவுலர்களுடனேயே ஆடுகிறது. 

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஜடேஜா, சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகிய 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் நிகோல்ஸும் களத்திற்கு வந்தனர்.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தே கப்டிலின் கால்காப்பில் பட்டது. அது லெக் ஸ்டம்புக்கு வெளியே போனது நன்கு கணிக்கும்படியே இருந்தது. அதற்கு இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் புவனேஷ்வர் குமார் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியதால் கேப்டன் கோலி ரிவியூ எடுத்தார். ஆனால் ரீப்ளேவில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே போனது உறுதியானதால் இந்திய அணி முதல் பந்திலேயே ரிவியூவை இழந்தது. 

ஆனாலும் அதன்பின்னர் அந்த ஓவரை அபாரமாக வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டனாக முடித்தார் புவனேஷ்வர் குமார். அதற்கடுத்த ஓவரை நிகோல்ஸை வைத்து மெய்டனாக முடித்தார் பும்ரா. இரண்டு ஓவர்களில் கப்டில் மற்றும் நிகோல்ஸால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் கப்டில் ஒரே ஒரு ரன் அடித்தார். மீண்டும் நான்காவது ஓவரை வீசவந்த பும்ரா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கப்டிலை வீழ்த்தினார் பும்ரா. 

இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து கப்டில் ஒரு ரன்னில் வெளியேறினார். 14 பந்துகள் ஆடி வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார் கப்டில். ஒரு ரன்னுக்கே ஒரு விக்கெட்டை இழந்தநிலையில் நிகோல்ஸுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

முதல் நான்கு ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அபாரமாக வீசி நியூசிலாந்து வீரர்களை மிரட்டினர். 
 

click me!