உலக கோப்பை அரையிறுதி: இந்திய அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்.. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 2:57 PM IST
Highlights

இந்திய 6 பவுலர்களுடன் களமிறங்குமா அல்லது 5 பவுலர்களுடன் தான் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த போட்டியிலும் இந்திய அணி 5 பவுலர்களுடன் தான் களமிறங்கியுள்ளது. 
 

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஆடும் இந்திய அணி குறித்த எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்தன. 

இந்திய 6 பவுலர்களுடன் களமிறங்குமா அல்லது 5 பவுலர்களுடன் தான் களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த போட்டியிலும் இந்திய அணி 5 பவுலர்களுடன் தான் களமிறங்கியுள்ளது. 

இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆடிய அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப்பை தவிர மற்ற அனைத்து வீரர்களும் அப்படியே ஆடுகின்றனர். குல்தீப்புக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் மிடில் ஓவர்களில் குல்தீப் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கவில்லை. 

இந்நிலையில், இந்த போட்டியில் குல்தீப் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே அணியுடன் தான் களமிறங்கியுள்ளது.


இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா. 
 
நியூசிலாந்து அணி:

கப்டில், நிகோல்ஸ், வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், ஃபெர்குசன், ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட். 
 

click me!