உலக கோப்பை 2019: இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதும்.. ஜாண்டி ரோட்ஸ் கணிப்பு

Published : Jul 09, 2019, 01:59 PM IST
உலக கோப்பை 2019: இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதும்.. ஜாண்டி ரோட்ஸ் கணிப்பு

சுருக்கம்

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்து கருத்து தெரிவித்திருந்தனர்.  

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது. 

உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாண்டி ரோட்ஸ், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும் என்று தெரிவித்துள்ளார். 

ஜாண்டி ரோட்ஸின் கணிப்பு உண்மையானால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 2003க்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இறுதி போட்டியில் மோதும். 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!