அதுதான் நான் இருக்கேன்ல.. அப்புறம் என்ன கவலை..? பிரஸ் மீட்டில் கலகலத்த கோலி

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 2:28 PM IST
Highlights

2008 அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அந்த போட்டியில் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தியது விராட் கோலி. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மான்செஸ்டரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 11ம் தேதி பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பும்ரா, ஷமி/புவனேஷ்வர் குமார், சாஹல்/ஜடேஜா, குல்தீப், ஹர்திக் பாண்டியா என 5 பவுலர்களுடன் தான் இதுவரை இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இந்திய அணி 6 பவுலர்களுடன் ஆடுமா அல்லது 5 பவுலர்களுடன் தான் ஆடுமா என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. குல்தீப்-சாஹல் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஃபாஸ்ட் பவுலர்கள், சாஹல் - ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் என மொத்தம் 5 பவுலர்கள். இவர்களுடன் ஹர்திக் பாண்டியா என மொத்தம் 6 பவுலிங் ஆப்சனுடன் இந்திய அணி களமிறங்குமா அல்லது 2 ஃபாஸ்ட் பவுலர்கள், ஜடேஜா - சாஹல் ஸ்பின் ஜோடியுடன் ஹர்திக்கையும் சேர்த்து 5 பவுலர்களுடன் களமிறங்குமா என்பது கேள்வியாக உள்ளது. 

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலியிடம், குல்தீப் - சஹால் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடன் சேர்த்து 6 பவுலர்களுடன்(ஜடேஜா உட்பட) களமிறங்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, 6 பவுலர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆம் இதற்கு முன் 5 பவுலர்களுடன் களமிறங்கினோம். பேட்டிங்கில் டெப்த் தேவை என்பதற்காக அப்படி இறங்கினோம். 

சேஸிங் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக பேட்டிங் டெப்த் அவசியம். அதனால் 5 பவுலர்களுடன் இறங்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை 5 பவுலர்களுடன் இறங்க நேரிட்டால் ஆறாவது பவுலராகத்தான் நான் இருக்கிறேனே.. நான் தான் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறேனே.. அதனால் எப்போது வேண்டுமானாலும் பவுலிங் போடுவேன். நானும் எவ்வளவு நேரம்தான் ஸ்லிப்பிலேயே நின்று கொண்டிருப்பது? என்று சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக பதிலளித்தார். 

2008 அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அந்த போட்டியில் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தியது விராட் கோலி. அதை சுட்டிக்காட்டித்தான் கோலி பேசினார். 
 

click me!