ரோகித் சர்மா ஒரு கேப்டனாக இன்று தனது 100ஆவது போட்டியில் விளையாடும் நிலையில், 7ஆவது இந்திய கேப்டனாக இந்த சாதனையை நிகழ்த்த உள்ளார்.
லக்னோவில் நடக்கும் 29ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்று 10ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நடையை கட்டும் வங்கதேசம் – சாதனையோடு அரையிறுதி வாய்ப்புக்காக வீர நடை போடும் நெதர்லாந்து!
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டியானது டையில் முடிந்துள்ளது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று இரு அணிகளும் 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 57 போட்டிகளிலும் இங்கிலாந்தும், 44 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது லக்னோவில் நடக்கிறது.
India vs England: 9ஆவது முறையாக உலகக் கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை; வெற்றி யாருக்கு?
இந்த நிலையில், தான் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக இன்று தனது 100ஆவது போட்டியில் விளையாடுகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி, 2ல் தோல்வி மற்றும் 2 போட்டிகளில் டிரா அடைந்துள்ளது. இதே போன்று 39 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள ரோகித் சர்மா 29 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். மேலும் ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. மேலும், ஒரு கேப்டனாக விளையாடிய 51 போட்டிகளில் 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.
India vs England: பயிற்சியின் போது ரோகித் சர்மாவிற்கு காயம் – ஓடி வந்து சிகிச்சை அளித்த பிசியோ!
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா 100ஆவது போட்டியில் விளையாடுவதன் மூலமாக 7ஆவது இந்திய கேப்டனாக இந்த சாதனையை நிகழ்த்த உள்ளார். இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனி 332 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாரூதீன் 3 உலகக் கோப்பைகளில் கேப்டனாக இருந்துள்ளார். மேலும், 221 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். விராட் கோலி 213 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.
சவுரவ் கங்குலி – 196 போட்டிகள்
கபில் தேவ் – 108 போட்டிகள்
ராகுல் டிராவிட் – 104 போட்டிகள்
ரோகித் சர்மா – 99 போட்டிகள்*
சச்சின் டெண்டுல்கர் – 98 போட்டிகள்
முதல் முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு துணை கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, அடுத்ததாக விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 அம் ஆண்டு டிசம்பர் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தொடரின் போது காயம் ஏற்படவே தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இந்த தொடருக்கு பின், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட், 29 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 39 டி20 போட்டிகளில் என்று மொத்தமாக 73 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.