ஒவ்வொரு நேரமும் பெய்த மழையால் கடினமாக உழைத்த மைதான ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த அணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், ரோகித் சர்மா 56 ரன்னிலும், சுப்மன் கில் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த விராட் கோலி 122 ரன்கள் நாட் அவுட், கேஎல் ராகுல் 111 ரன்கள் நாட் அவுட் சாதனை படைக்க இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 356 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. பின்னர் கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடியது. இதில், இமாம் உல் ஹாக் 9 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முகமது ரிஸ்வான் 2 ரன்களில் வெளியேற, ஃபஹர் ஜமாம் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அகா சல்மான் 23 ரன்னிலும், இப்திகார் அகமது 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக பாகிஸ்தான் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!
இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, ஒவ்வொரு முறையும் மழையால் போட்டி பாதிக்கப்படும் போது கடினமாக வேலை செய்ததது என்னவோ மைதான ஊழியர்கள் தான். மைதானம் முழுவதும் தார்பாய் கொண்டு மூடுவதும், அதன் பிறகு அதனை எடுப்பதும் என்பது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு ஒட்டுமொத்த அணியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், நேற்றிலிருந்தே அருமையான செயல்திறன். நாங்கள் தொடங்கும் போது, விக்கெட் நன்றாக இருந்தது என்று எங்களுக்குத் தெரியும், மழையுடன் நாங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது, அனுபவம் வாய்ந்த இரண்டு (கோலி மற்றும் ராகுல்) தோழர்கள் தங்கள் பார்வையைப் பெற நேரம் எடுப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். பும்ரா கடந்த 8-10 மாதங்களாக மிகவும் கடினமாக உழைத்தார். பும்ராவுக்கு வயது 27, அவர் போட்டிகளை தவறவிடுவது சிறந்ததல்ல.
ஆனால் அவர் பந்துவீசிய விதம் அவர் எதைப் பற்றியது என்பதைக் காட்டுகிறது. நாங்கள் எப்படி பேட்டிங் செய்தோம் என்பதைப் பார்க்கும்போது, தொடக்க ஆட்டக்காரர்களிடமும், விராட் மற்றும் கேஎல்லிடமும் நிறைய நேர்மறைகள் இருந்தன. விராட்டின் இன்னிங்ஸ் அற்புதமாக அமைந்தது. பின்னர் கே.எல்., காயத்தில் இருந்து மீண்டு, டாஸ் போடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் தான் விளையாடுவது தெரிந்து அற்புதமாக விளையாடினார். அப்படி விளையாடுவது வீரரின் மனநிலையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.