அம்பயர் மீது கடுப்பாகி ரோஹித் செய்த சம்பவம்.. ஆப்படித்த ஐபிஎல் நிர்வாகம்

By karthikeyan VFirst Published Apr 29, 2019, 2:07 PM IST
Highlights

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஅணி, கில் மற்றும் லின்னின் அதிரடியான தொடக்கம் மற்றும் ஆண்ட்ரே ரசலின் அதிரடியான ஃபினிஷங்கால் 20 ஓவர் முடிவில் 232 ரன்களை குவித்தது. 

233 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா மட்டுமே தனி ஒருவனாக போராடி பார்த்தார். அவரும் 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, 198 ரன்கள் அடித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்து 4வது ஓவரில் ஆட்டமிழந்தார். கர்னி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதற்கு அம்பயர் அவுட் கொடுக்க, ரோஹித் சர்மா ரிவியூ அப்பீல் செய்தார். பந்து லெக் ஸ்டம்பின் மேல் பகுதியில் ஸ்டிக்கில் அடிக்க, அது அம்பயரின் தீர்ப்புக்கே விடப்பட்டது. அந்த வகையில் ரோஹித் சர்மா அவுட்டானார். அம்பயரின் தீர்ப்பால் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா, அவுட்டாகி செல்லும்போது பவுலிங் முனையில் இருந்த ஸ்டம்பை தட்டிவிட்டு அம்பயரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ஏதோ பேசிவிட்டு சென்றார். 

ரோஹித் சர்மாவின் இந்த செயல், ஐபிஎல் விதிமீறிய செயல் என்பதால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பவுலிங் போட அதிகநேரம் எடுத்துக்கொண்டததற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோஹித் சர்மா ஏற்கனவே ஒருமுறை அபராதம் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!