கோல்டன் டக்கில் வெளியேறிய ரோகித் சர்மா – ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் முதலிடம்!

By Rsiva kumar  |  First Published Apr 1, 2024, 8:03 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா கோல்டன் டக்கில் வெளியேறியதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 17ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.


மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ராஜஸ்தான் அணியில் முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் முதல் 4 பந்துகள் பிடித்து இஷான் கிஷான் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து ரோகித் சர்மா பேட் செய்தார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டில் வெளியேறிய வீரர்களின் பட்டியலில் 17 முறை ஆட்டமிழந்த தினேஷ் கார்த்திக் உடன் இணைந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

 

MUMBAI INDIANS 20 FOR 4 AT WANKHEDE 🤯

- Rajasthan Royals on fire. pic.twitter.com/2Q7Izw2Io6

— Johns. (@CricCrazyJohns)

 

ரோகித் சர்மா, 17ஆவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடும் 201ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUMBAI INDIANS 20 FOR 4 AT WANKHEDE 🤯

- Rajasthan Royals on fire. pic.twitter.com/2Q7Izw2Io6

— Johns. (@CricCrazyJohns)

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆனவர்கள்:

17 – ரோகித் சர்மா (இன்றைய போட்டி)

17 – தினேஷ் கார்த்திக்

15 – கிளென் மேக்ஸ்வெல்

15 – பியூஷ் சாவ்லா

15 – மந்தீப் சிங்

15 – சுனில் நரைன்

முதல் ஓவரின் கடைசி பந்தில் நமன் திர்ரும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். மேலும், முதல் ஓவரிலேயே 2 விக்கெட் கைப்பற்றி டிரெண்ட் போல்ட் அசத்தியுள்ளார்.

 

Golden duck for Rohit Sharma. pic.twitter.com/6T9fzAoZGg

— Johns. (@CricCrazyJohns)

 

click me!