புதுசா ஸ்கெட்ச் போட்ட சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் ஜெயிச்சு பவுலிங், வான்கடேயில் வெற்றி யாருக்கு?

By Rsiva kumarFirst Published Apr 1, 2024, 7:19 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அவே மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் முறையே 6 ரன்கள் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் ஐபிஎல் ஹோம் மைதான அணி வெற்றி பெற்று வரும் நிலையில் இன்று 14ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தனது ஹோம் கிரவுண்டான வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்தீப் சர்மா நீக்கப்பட்டு நந்த்ரே பர்கர் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகம் செய்யப்பட்ட 17 வயது இளம் வீரரான குவெனா மபகா இந்தப் போட்டியிலும் விளையாடுகிறார். தனது அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் வீசி 66 ரன்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சகால்.

மும்பை இந்தியன்ஸ்:

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்ப்ரித் பும்ரா, குவெனா மபகா.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹோம் கிரவுண்டில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் முதல் முறையாக அவே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை இதுவரையில் தான் அடைந்த தோல்விக்கும், விமர்சனத்திற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 28 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 15 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 214, இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. வான்கடே மைதானத்தில் நடந்த இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 5 போடிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

வான்கடே மைதானம்:

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு உதவக் கூடியதாக இருந்தாலும் குறுகிய பவுண்டரி லைன் அவர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மொத்தமாக 78 போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.  

click me!