டி20 உலகக் கோப்பையின் போது அதிகம் பேசப்பட்ட வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் – 5.5 மில்லியன்!

By Rsiva kumar  |  First Published Jul 8, 2024, 3:16 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரின் போது அதிகம் பேசப்பட்ட இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 5.5 மில்லியன் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடின. கடைசியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன.

பாலிவுட் நடிகையுடன் திருமணமா? என்னையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் பெண் - ஓபனாக பேசிய குல்தீப் யாதவ்

Latest Videos

undefined

கடந்த ஜூன் 29 ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அனியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணிக்கு டெல்லியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி வீரர்கள் அதன் பிறகு மும்பை சென்றனர்.

அங்கு திறந்தவெளி பேருந்தில் வான்கடே ஸ்டேடியம் வரையில் வெற்றி அணிவகுப்பு நடத்தினர். இதைத் தொடர்ந்து வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் பேசினர். கடைசியாக டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

டி20 WC வின்னிங் டீமுக்கு பிசிசிஐ கொடுத்த ரூ.125 கோடி பரிசுத் தொகை – யார் யாருக்கு எவ்வளவு?

இதே போன்று மகராஷ்டிரா அரசு சார்பில் ரோகித் சர்மா, ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ரூ.11 கோடியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடரில் ஆரம்பம் முதல் முடிவு வரையில் அதிகம் பேசப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரராக ரோகித் சர்மா திகழ்ந்துள்ளார்.

அதன்படி பார்த்தால் ரோகித் சர்மா பற்றி தான் அதிகளவில் பேசியிருக்கின்றனர். இவரைப்பற்றி கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் பேசியிருக்கின்றனர். இந்த தொடரில் ரோகித் சர்மா 8 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 257 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று விராட் கோலி பற்றி 4.1 மில்லியன் மக்கள் பேசியிருக்கின்றனர்.

Cricket Players and Cinema Actress: நடிகைகளை திருமணம் செய்த இந்திய விளையாட்டு வீரர்கள் யார் யார் தெரியுமா?

இதே போன்று சூர்யகுமார் யாதவ் பற்றி 1.3 மில்லியன் மக்கள் பேசியிருக்கின்றனர். ஜஸ்ப்ரித் பும்ரா பற்றி 1.2 மில்லியன் மக்களும், ஹர்திக் பாண்டியா பற்றி 1.1 மில்லியன் மக்களும் பேசியிருக்கின்றனர். இந்த தொடரில் விராட் கோலி விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உள்பட 151 ரன்கள் குவித்துள்ளார்.

click me!