டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய குல்தீப் யாதவ் தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 9 ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பியது. டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர். கடைசியாக வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
டி20 WC வின்னிங் டீமுக்கு பிசிசிஐ கொடுத்த ரூ.125 கோடி பரிசுத் தொகை – யார் யாருக்கு எவ்வளவு?
இதில், ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கடைசியாக டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் மும்பையில் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற குல்தீப் யாதவ்விற்கு ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இசை நிகழ்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாலிவுட் நடிகையுடன் திருமணம் கிடையாது. ஆனால், கூடிய விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், என்னையும், எனது குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொள்ளும் பெண் தான் என்று கூறியுள்ளார். மேலும், கான்பூர் சென்ற குல்தீப் யாதவ்விற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும் பேசியிருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். நீண்ட நாட்களாக இதற்காகத்தான் காத்திருந்தோம். ரசிகர்களை இங்கு பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பை டிராபியை கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களை விட இந்தியாவிற்கு அதிகம். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.